தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, சிவலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றி படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் இவற்றை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி சிவலார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் ஊர் தலைவர் கோவிந்தராஜ் புதூர் மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.