கோவை மாநகர் சுந்தராபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் பிரதான சாலையான சாரதா மில் ரோடு பகுதி தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலையாக உள்ளது. இந்த சாலையில் சாரதா வித்யாலயா பள்ளியின் அருகே பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுந்தராபுரத்தில் இருந்து போத்தனூர், செட்டிபாளையம், வெள்ளலூர் போன்ற ஊர்களுக்கு செல்வோர் இந்த சாலையை முக்கியமாக பயன்படுத்தி செல்கின்றனர் மேலும் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால் குழந்தைகளை பள்ளியில் விட பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் அதிகமாக வந்து செல்கின்றனர்.
கனரக வாகனங்கள் அல்லது கார்களுக்கு பின்னாலோ செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகும் எனவே உடனடியாக அந்த பள்ளமான பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
One Response