தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செக்காரக்குடி ஊராட்சி மற்றும் தளவாய்புரம் ஊராட்சி ஆகியவற்றிற்கு இடையே 13 மீட்டர் நீளத்தில் ஒரு தாம்போதி பாலம் உள்ளது. இந்த பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைத்து தர பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் விளைவாக இந்த தரைமட்ட பாலத்தை நபார்டு திட்டம் மூலம் உயர் மட்ட பாலமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கி டென்டர் கோரப்பட்டது.
ஆனால் ஒப்பந்ததாரர் பணியை துவங்காமல் தாமதிப்பதால் மழை நேரங்களில் தூத்துக்குடியில் இருந்து செக்காரக்குடி வரும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது.. இதனால் செக்காரக்குடி ஊராட்சி பொதுமக்கள் உள்ளேயும் வர முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் தீவு போல இந்த பகுதி மழை நேரங்களில் மாறி விடுகிறது. அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரைந்து இந்த பாலம் அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள கொள்கிறோம்
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.