கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே புதிதாக தனியார் மதுபான கூடம் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே இப்பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது இப்பகுதியில் தனியார் மதுபான கூடம் திறப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே தனியார் மதுபான கூட்டத்தை திறக்கக் கூடாது என்று நகர மன்ற துணைத் தலைவர் கௌதம் மற்றும் 33 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா தலைமையில் திமுகவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுபான கூட்டத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான கூட்டத்திற்கு எதிராக திமுகவினர் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில்,
செய்தியாளர்,
M.சுரேஷ்குமார்.