கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம் முன்னாள் தாசில்தார்க்கு நான்கு ஆண்டு கடுமையான சிறையும் 30,000 ரூபாய் அபராதம். மூவாற்றுபுழா விஜிலன்ஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தாசீல்தாராக இருந்த ராமன் குட்டியைத்தான் நீதிமன்றம் தண்டித்தது. 2001-2002 காலகட்டத்தில் தேவிகுளம் தாசீல்தாராக ராமன் குட்டி இருந்தார். இக்காலக்கட்டத்தில் கண்ணன் தேவன் ஹில்ஸ் வில்லேஜில் உள்ள அரசு நிலத்தை 36சென்ட் இடத்தை இரண்டு தனியார் நபர்களின் பெயரில் பட்டா பதித்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதால், இடுக்கி விஜிலன்ஸ் யூனிட் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை வழங்கிய வழக்கில் முதலாம் குற்றவாளியாக தேவிகுளம் முன்னாள் தாசில்தாராக இருந்த ராமன் குட்டியை குற்றவாளியாகக் கண்டுபிடித்தனர்.
இடுக்கி விஜிலன்ஸ் முன்னாள் டி.வை.எஸ்.பி கே.வி. ஜோசப் பதிவு செய்த வழக்கில் இடுக்கி விஜிலன்ஸ் முன் இன்ஸ்பெக்டராக இருந்த வி. விஜயன், முகமது கபீர் ராவுத்தர், இ.சி. ஜோசப், அலக்ஸ்.எம்.வர்க்கி ஆகியோர் விசாரணை நடத்தினர். இடுக்கி விஜிலன்ஸ் முன்னாள் டி.வை.எஸ்.பி பி.டி.கிருஷ்ணன்குட்டி குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் ராமன்குட்டி குற்றவாளி என்று மூவாற்றுபுழா விஜிலன்ஸ் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக ராமன் குட்டியை மூவாட்டுபுழா சப் ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அஜித்,மூணாறு.