கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணத்தை சேர்ந்தவர்கள் சம்பத், கதிர்வேல், இருவரும், நேற்று முன்தினம் இரவு, பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாமரைக்குளத்தில் உள்ள ‘யூ டர்ன்’ பகுதியில், டிராக்டரில் சென்று திரும்பியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, மேல்மருவத்துாரில் இருந்து, 49 பயணியருடன் பொள்ளாச்சி நோக்கி வந்த பஸ், டிராக்டர் மீது மோதியது.
விபத்தில், டிராக்டரில் இருந்தவர்கள் துாக்கி வீசப்பட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே கதிர்வேல் இறந்தார். மேலும், சுற்றுலா பஸ்சில் இருந்த ஐந்து பயணிகள் காயமடைந்தனர். அவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மற்ற பயணியர் காயமின்றி தப்பினார். இது போன்ற U டர்ன் பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.