யாவரும் கேளீர், என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்கள்
ஶ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள புதுக்குடி கிராம மக்கள். இரயில் ஞாயிறு இரவு அங்கே வந்து நின்றது. ஏதோ சில மணி நேரத்தில் அங்கிருந்து புறப்படும் என நினைத்த நேரத்தில் அங்கே தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியதால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டு,
கனமழை காரணமாக யாரும் இரயிலை விட்டு இறங்க வேண்டாம் என அறிவிப்பும் வந்தது. அன்று இரவு தங்களிடம் இருந்த உணவுப்பொருட்களை வைத்து சமாளித்தனர்.
மறுநாள் காலையில் இருந்து பசியால் முதியோர்கள், குழந்தைகள் என அனைவரும் வாடிய போது அங்கு உதவியது தான் அந்த புதுக்குடி கிராம மக்கள். புதுக்குடி கிராம மக்கள் தங்களிடம் இருத்த
அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்களை கொண்டு ரயில் நிலையம் அங்கே இருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலில் வைத்து சமையல் செய்து அங்கு இருக்கும் 800 மேற்பட்ட பயணிகளுக்கும் திங்கள் கிழமை காலை முதல் நேற்று செவ்வாய் இரவு வரை சமைத்து உணவுகளை அனைவருக்கும் வழங்கியுள்ளார்கள்
மனித நேயத்துடன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர்களை தங்களின் உறவுகளாக பாவித்து உபசரித்தது அனுசரணை யாக இருந்தது அந்த ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்றனர் பயணிகள். கிராம மக்கள் தங்களிடம் இருந்த மாடுகளில் பால் கறந்து அதனை காய்ச்சி ஒவ்வொரு இரயில் பெட்டிகளிலும் ஏறி அங்குள்ள முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாசத்துடன் கொடுத்துள்ளனர். இதைப்பார்த்த அந்த பயணிகள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து அந்த கிராம மக்களுக்கு தாங்கள் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம் என்று சொன்னார்கள்.
புதுக்குடி கிராமத்தில் இருந்து சுமார் 300 பயணிகள் ஓரளவு வெள்ளம் வடிந்தவுடன்
ரயில் தண்டாவளத்தின் வழியாகவே பத்து கிமீ நடந்து சென்று உள்ளனர்.
அப்போதும் அங்கே இருக்கும் தாதன்குளம் கிராம மக்கள் அனைவருக்கும் உணவு , குடிநீர் தந்து பசியாற்றி தங்களின் வண்டிகள் மூலம் அவர்கள் பேரூந்து மற்றும் வாஞ்சி மனியாச்சி இரயில்வே நிலையம் செல்ல உதவியுள்ளனர்.
இப்போது பத்திரமாக அங்கு சிக்கி தவித்த அனைத்து பயணிகளையும் மீட்புக்குழுவினர் மீட்டு தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பு வைத்து விட்டனர். என்னதான் நவீன வளர்ச்சி அடைந்த தொழில்நுட்பம் நமக்கு இருந்தாலும் இயற்கையை எதிர்த்து அங்கே சிக்கி தவித்த பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை கூட ஹெலிகாப்டர் மூலம் தரமுடியாத சூழலில் அந்த கிராமமக்களின் மனித நேயம் வென்றது. நாம் அனைவரும் பாராட்டவேண்டும் அந்த புதுக்குடி கிராமமக்களை. கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். இப்போ அதற்கு சாட்சியாக இருந்துள்ளது புதுக்குடி கிராம பத்திரகாளியம்மன் கோவில். வாழ்த்துக்கள் மக்களே. பாராட்டுகிறோம் உங்கள் மனித நேயத்தை.
நாளைய வரலாறு விளாத்திகுளம் செய்தியாளர்,
-பூங்கோதை.