தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
மாப்பிள்ளையூரணி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நாளையும் இதே போல் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
இன்னும் 4 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது மக்கள் படகுகள் மூலம் மட்டுமே வெளிவர முடிகிறது . இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு சில மக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்கிறார்கள்.
இந்த நிகழ்வில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்புசாமி மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் முனியசாமி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முடுக்காலன்குளம் சாமிராஜ் மாணவரணி ஒன்றிய செயலாளர் முருகலிங்கம் மற்றும் சோழபுரம் பஞ்சாயத்து தலைவர் விஜயா அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.