தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்னும் வெள்ள நீர் வடியாமல் இயல்பு வாழ்க்கை திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வந்தனர் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அரசு அதிகாரிகள் பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த மக்களின் குற்றச்சாட்டு 4 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கிறது கால்நடை உயிரினங்கள் இறந்து மிதக்கிறது தண்ணீரில் துர்நாற்றம் வருகிறது. அரசு அதிகாரிகள் பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீரில் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.