கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இந்த எஸ்டேட் பகுதிகளில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பொருள் வாங்க வால்பாறை டவுன் பகுதிக்கு வருவது வழக்கம் இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வால்பாறை டவுன் பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படும் மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருவதால் வால்பாறை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் இந்த சூழ்நிலையில் வால்பாறை டவுன் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை வரைமுறை இன்றி சாலை ஓரங்களிலும் சாலை நடுவிலும் வைத்து போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடை படுகிறது சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது இதனை பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சாலையோர கடைகள் வைப்பவர்கள் முறையாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வைக்க வேண்டும் என்று வால்பாறை நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.