தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லம்பரும்பு ஊராட்சியை சுற்றிலும் 3000- மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
விளாத்திகுளம் தொகுதி முழவதும் பசுமை திட்டம் தொடங்கி ஒவ்வொரு பகுதியில் மரங்கள் நடும் விழா தொடர்ந்து நடைபெற்றது வருகிறது. இந்த நிகழ்வில் கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி சந்தானராஜ் முள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி T.சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பு வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெக்கம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.