கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா அருகாமையில் உள்ள ஐயர்பாடி ரேப்பை எனும் பகுதியில் சாலை ஓரங்களில் அதிக அளவு சிறுத்தைகள் நடமாட்டிக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு அப்பகுதியில் உலா வந்த சிரத்தையே கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். இதனால் இது போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் அத்தியாவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார். செந்தில் குமார்.