தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்கள் போதை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுரையில் மனநல சிகிச்சைகள் சார்ந்த தூக்கம் தரும் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை சிறார்கள் சாப்பிட்டு போதைக்கு அடிமையாவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சிறார்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுப்படுத்த மருத்துவர் பரிந்துரைகள் இன்றி அதிகளவிற்கு தூக்கம் தரும் மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது . மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுரை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம்- 1940 மற்றும் விதிகள் 1945 ன் படி “X” and மன நல சார்ந்த சிகிச்சைகள் தொடர்பான ‘H’, ‘H1’Drugs” குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் மருந்தகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளன. அதன்படி இன்றைய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அலுவலர்கள் மூலம் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். அந்த சமயத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-தமிழரசன், மேலூர்.