கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் 6 மாதங்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் டாக்டர் குழுவுக்கு அறுவை சிகிச்சை ஒரு சவாலாக இருந்துள்ளது சவாலை தோற்கடித்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக வால்பாறை அரசு மருத்துவமனையிலே செய்துள்ளனர்.
இந்த மகத்தான மருத்துவ சேவையை சிறப்பாக செய்து முடித்த வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டர் குழுவிற்கும் மற்றும் மாவட்ட இணை இயக்குனருக்கும் குழந்தையின் பெற்றோர் உறவினர்கள் பொதுமக்கள் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்களுடன் வால்பாறை P.பரமசிவம் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறார்.
-M.சுரேஷ்குமார்.