கோவை மாவட்டம். போத்தனூர் 99 வது வார்டுக்கு உட்பட்ட, ஸ்ரீராம் நகர். அருள்முருகன் நகர். பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் துவங்கின.
வருகின்ற ஜனவரி 26 குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீராம் நகர் முருகன் நகர் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், கடந்த 23 வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன இதில் ஒரு பகுதியாக இன்று குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஓவியம். மற்றும் செஸ். போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சார்ந்த ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை ஸ்ரீராம் நகர் அருள்முருகன் நகர் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்
-ஈசா.