கோவை குனியமுத்தூர்,(பி கே புதூர்) பகுதியில் வசிப்பவர் சந்துரு (24) இவர் தனது வீட்டின் அருகே தனது புதிய இரு சக்கர வாகனம் புல்லட்.(24/12/23) அன்று நிறுத்தி உள்ளார் பின் மறுநாள் காலையில் அங்கு நிறுத்தி வைத்து இருந்த வாகனம் அங்கு இல்லை அப்போது வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது.
இதை அடுத்து குனியமுத்தூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார் சந்துரு, பின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வாகனத்தை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர், அப்போது விருதுநகர் மாவட்டம் நகர் பகுதியில் காவல்துறையினரால் அந்த இருசக்கர வாகனம் (03/01/24) அன்று பிடிபட்டது. பின் வாகன உரிமையாளரிடம்ஒப்படைக்கப்பட்டது
இதுபோன்று தொடர் சம்பவம் குனியமுத்தூர் பகுதியில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுமக்கள் வாகனங்களை கண்காணிப்பாகவும் பூட்டி சரியான முறையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்துகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தொண்டாமுத்தூர் நிருபர்
-ரஞ்சித்.