கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் எல்லப்பட்டி எஸ்டேட்டில் சாதாரண தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் R.விஜயன் ,V.ஹரிதா இவர்களின் மகள் வி. அபிதா ‘ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள்’ எனும் உலகச் சாதனை புத்தகத்தில் இணை ஆசிரியராக எழுதி உள்ளார். 06/01/2024 அன்று இந்த உலகச் சாதனை புத்தக வெளியீட்டிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் ஐயா, கவிஞர் சின்ன பாரதி சினேகன் அவர்களின் முன்னிலையில் சென்னையில் விழா நடைப்பெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் என்ற தமிழ் மொழியை வாழ்த்தி உலகில் முதல் முறையாக ஆயிரம் கவிஞர்கள் எழுதிய அந்த உலக சாதனை நூல் வெளியிடப்பட்டு உள்ளது. மன்றத்தினுடைய தலைவர் கவிஞர் எடையூர் நாகராசன் , பொருளாளர் ஆன்மீகச்சுடர் ஈ. ஆறுமுகம் மற்றும் திருமதி சுகன்யா நந்தகுமார் ஐயா வீ.ஜி. சந்தோஷம் கவிஞர் முத்துலிங்கம் மற்றும் ஐயா கவிஞர் சின்ன பாரதி சினேகன் அய்யா அவர்களும் இந்த இனிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் ஜோசப் சாமுவேல் அவர்கள் இந்த உலக திருக்குறள் மாநாட்டின் தலைவராக இருந்து வழிகாட்டி மாநாடு சிறப்பாக அமைய ஒத்துழைப்பு வழங்கிய திருமதி அம்மா புனிதா கணேசன் , ஐயா கா.மு சேகர் ,பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் மற்றும் வருகை தந்து சிறப்பித்த மாமன்ற உறுப்பினர் அண்ணன் எம் கமல் அவர்கள் உலக சாதனை அமைப்பினுடைய நிறுவனத் தலைவர் ஐயா ராஜேந்திரன் , விழா சிறக்க ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அண்ணன் எச். பீர்முகமது ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் என்ற நூல் வெளிவர மிகவும் பாடுபட்ட கவிஞர் செந்தலை நெப்போலியன்,
க.ச.கலையரசன் அவர்களின் முன்னிலையில் உலகச் சாதனை புத்தகம் வெளியிடப்பட்டது.
இது போன்ற மேலும் பல புத்தகங்களையும் , கவிதைகள்,கவிஞர் விருதுகளும் பல வெற்றிகளையும் பெற MUNNAR DAILY NEWS TEAM KL68, நாளைய வரலாறு செய்திகள் மற்றும் மூணாறு மக்கள் சார்பாகவும் வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.