பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் கீதா, ஏரிப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தமிழ் மொழி மீதும் திருக்குறள் மீதும் அதிகம் பற்று கொண்ட ஆசிரியர் கீதா, திருக்குறளையும் அதில் உள்ள வாழ்க்கை முறை கருத்துக்களையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் 1330 திருக்குறளை நோட்டில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் தன்னால் பயின்று வரும் மாணவர்களும் மட்டுமல்ல அனைத்து தரப்பு மாணவர்களும் பொது மக்களும் திருக்குறள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஐஸ் கிரீம் குச்சியில் 1330 திருக்குறளை எழுதி பல்வேறு இடங்களில் நடைபெறும் கண்காட்சியில் வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக கல்வித்துறை சார்பில் தென்கொரியாவில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற வானவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா தான் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய 1330 திருக்குறளில் 650 திருக்குறளை எழுதிய குச்சியை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மூலம் தென் கொரியா தமிழ் சங்கத்திற்கு பரிசாக வழங்கினார்.
மீதமுள்ள ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய திருக்குறளை மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியாக ஆங்காங்கே வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஆசிரியையின் இந்த முயற்சிக்கு நாளை வரலாறு புலனாய்வு இதழ் மற்றும் புலன தளம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.