தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாமானது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகபுரம் கிராமத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ D.Ted., MLA அவர்கள் தலைமையில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் உயர்திரு.P.மோகன் B.Sc., Ex.MLA அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மருத்துவர் அணியைச் சேரந்த புகழ்பெற்ற மருத்துவர்கள் பங்கு பெற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் பரிசோதனைக்குபின் பின்பற்றக்கூடிய தேவையான மருத்துவ அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்கள்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் R.ஜவஹர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி P.கோபி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி காமாட்சி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட மாணவரணி இ.செயலாளர் S.R சின்னத்துரை , IT விங்க் மாவட்ட இ.செயலாளர் கௌதம் பாண்டியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் M.S கண்ணன் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜேந்திரன் மாப்பிள்ளையூரணி பால்ராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் திரு.N.தினேஷ்குமார் மற்றும் மகளிரணியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.