தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார். ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட வாலசமுத்திரம், பாஞ்சாலங்குறிச்சி, ஒட்டப்பிடாரம், முறம்பன், ஒட்டநத்தம், அக்காநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரகவேலைவாய்ப்புதிட்டம் அண்ணாமறுமலர்ச்சி திட்டம்,நபார்டு ஆகிய திட்டத்தின் கீழ் ரூ505 லட்சத்தில் மேற்கொள்ளபட்டு வரும் பணிகளையும், 15வது மாநில நிதி குழு திட்டம் மூலம் ஒட்டநத்தம் ஆரம்பசுகாதார வளாகத்தில் ரூ54.75 லட்சத்தில் புதிதாகட்டப்பட உள்ள வட்டார அளவிலான சுகாதார கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சாலை மற்றும் பாலங்கள் முத்துமாரி, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஓன்றிய பொறியாளர்கள், தளவாய்,நமச்சிவாயம் ஜெயபால்,காயத்ரி, பத்மாவதி, மண்டல துனை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள் ஊராட்சி செயலர்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.