ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை செவிலியர்களின் அலட்சியப் போக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!!!

ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் இரவில் பணிபுரியும் நர்சுகள் அலட்சியம்
பிரசவ வலி அதிகமாக இருந்தால் நீங்கள் எங்களை எழுப்பக் கூடாது என நக்கல் பேச்சு
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டபிடாரத்தில் வ.உ.சி அரசு மருத்துவமனையானது செயல்பட்டு வருகிறது. ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையை 30க்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு உள் மற்றும் வெளி நோயாளியாக தினசரி 200க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும் இம்மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் என்பது கிடையாது என தொடர் குற்றச்சாட்டு இதனால் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அவசர சிகிச்சைக்காக இரவு நேரங்களில் இங்கு வந்தால் இங்குள்ள பணியாளர்கள் மருத்துவர்கள் கிடையாது என கூறி திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் கால விரயம் ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஞ்சை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (31) என்பவர் தெற்கு ரயில்வேயில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அவரது மனைவி சுந்தரி தமிழ்நாடு காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுந்தரியை அவரது கணவர் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனைக்கு மாலை நேரத்தில் அழைத்து வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான சுந்தரி பிரசவ வலியால் துடித்து வந்த நிலையில் அங்கு பணியில் இருந்த நர்சுகள் பரிசோதனை செய்துவிட்டு போலீசாக இருந்தாலும் யாராக இருந்தாலும் வலி ஒன்றுதான் இந்த வலியை தாங்காவிட்டால் எந்த வலியை தாங்குவாங்க என அலட்சியமாக அவரது கணவரிடம் கூறிவிட்டு தூங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் பிரசவ வலி ஏதும் ஏற்பட்டால் நீங்கள் வந்து எங்களை எழுப்பக்கூடாது, பணியில் இருக்கும் காவலாளி இடம் தான் கூற வேண்டும் என அலட்சியத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை நர்சுகள் சரியாக கவனிக்காததால் சரவணன் தனது மனைவியை காரில் அழைத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து சரவணன் கூறுகையில்:
“தாங்கள் ஒரு அரசு ஊழியர் ஆகவும் பொருளாதாரத்தில் மேம்பட்ட எங்களால் இலட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியும். ஆனால் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்தால் அலட்சியத்துடன் நர்சுகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், சாமானிய மக்கள் வசிக்கும் ஓட்டப்பிடாரம் பகுதியில் செயல்படும் இந்த அரசு மருத்துவமனை, சாமானிய ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தொடங்கப்பட்டது தான் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை ஆனால் இன்று சிகிச்சைக்காக வருபவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வேதனையுடன் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp