தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜீவராஜ்பாண்டியன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
அப்போது நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் வாக்கு செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்ற இதனால் உளமாற உறுதியளிக்கிறேன், அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடு அற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுபற்றிருக்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமாற உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .
தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது அப்போது உணர்ச்சியற்ற தேமல் படை போன்ற தோல் நோய்கள் உள்ளவர்களையோ அல்லது தொழு நோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களையோ எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் உடனே அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வேன். தொழு நோய் முற்றிலும் குணமாக கூடியது தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்க கூடாது போன்ற விவரங்களை அந்த எல்லாருக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தேசபிதா மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மருத்துவ பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.