தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஸ்ரீ உலகாண்டேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற கோவில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசியில் தேதியில் கோவில் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஸ்ரீ உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
தை மாதம் 8 தேதி கோமாதா பூஜை அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று தை 9ஆம் தேதி மகா கணபதி ஹோமம் தை 10ஆம் தேதி காலை நேற்று 9.30 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் புனரமைப்புக்கு ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொழிலதிபர்கள் நிதி உதவி செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.