தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே சிதம்பராபுரத்தில் ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நல கூடத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே கே. சிதம்பராபுரம் மக்கள் எங்கள் ஊருக்கு சமுதாய நல கூடம் அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் கோரி வைத்தனர்.
இதனைக் ஏற்றுக் கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 33. இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் தனது சொந்த நிதியில் இருந்து நீர்த்தேக்க தொட்டியும் போர்வெல் அமைத்து கொடுத்தார்.
அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவடைந்தது திறப்பு விழா வண்டானம் கருப்புசாமி தலையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கடம்பூர் ராஜூ அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் அவர்கள் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், பஞ்சாயத்து தலைவர் சீதா லக்ஷ்மி முடுக்காலன்குளம் அம்மா பேரவை சாமிராஜ் கோவில்பட்டி செயலாளர் அம்பிகை பாலன் சிறுபான்மையினர் பிரிவு ராஜ் குமார் கலிங்கப்பட்டி கருப்பசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர்,
-முனியசாமி.