தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், காட்டுநாயக்கன்பட்டி,ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் அவர்கள் ஓட்டப்பிடாரம்,
ஒன்றிய துணைத் பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி மாவட்ட பிரதிநிதி சத்யராஜன் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி திருநாவுக்கரசு
ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா
உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.