தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோட்ட அளவிலான சிறப்பு கூட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் இணை செயலாளர் குருநாதன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர்கள் திரவியம், சுந்தரமூர்த்திநயினார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை,சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட துணைத் தலைவராக குருநாதன், பொருளாளராக துரைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பணி நிறைவு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட செயலாளர் சமஸ்தானம் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.