லைகா புரொடக்ஷன்ஸ் , ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ், நியூ மார்ச் ஃபாஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் ஆஸ்பென் ஃபிலிம் புரொடக்ஷன் தயாரித்து, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.இந்நிலையில் கோவை வந்த நடிகர் அருண் விஜய்,நடிகை எமி ஜாக்சன்,மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய்.ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.முன்னதாக பேசிய அருண் விஜய்,தான் நடித்துள்ள படங்களில் இந்த படம் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதல்முறையாக ஏ.எல்.விஜய்யுடன் இப்படத்தின் மூலம் நான் இணைந்துள்ளதாக கூறிய அவர், தன்னுடைய கேரியரில் இது மிகப்பெரிய பட்ஜெட் படம் எனவும்,,இந்த படம் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும்” என தெரிவித்தார்..தொடர்ந்து பேசிய இயக்குனர் விஜய் இந்த படத்தின் கதையில் கோவைக்கும் தொடர்பு இருப்பநாக கூறிய அவர்,தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்…தொடர்ந்து பேசிய நடிகை எமி ஜாக்சன் தமிழ் படங்களில் நடிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே தாம் ஆர்வமுடன் நடித்து வருவதாக கூறிய அவர்,தமிழ் மொழிபடங்களில் நடிப்பதில் மொழியை புரிந்து கொள்வதில் தமக்கு எந்தவித சிரமும் இல்லை என கூறினார்..
-சீனி, போத்தனூர்.