கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்பு ஆகிய இடங்களை கடந்து செல்லும் வகையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் ஆத்துப்பாலம் பகுதியை அடைந்து அதன் பிறகு தான் கோவை நகருக்குள் செல்கின்றன இதனால் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து உக்கடம் வரை மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது அதே நிலைதான் கோவை மாநகரிலிருந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலை செல்வதற்கும் இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன தற்பொழுது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேம்பாலத்திற்கு கீழே உள்ள பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே எதிர்ப்புறம் உள்ள சாலைக்கு செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நினைத்த இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக கடந்து எதிர்புறம் உள்ள சாலைகளுக்கு செல்ல முடியாத வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வாகன விபத்து ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்ட ஒரு சிறப்பான முடிவு தான் என்றாலும் ஒரு சில இடங்களில் பொதுமக்களை மிகவும் கஷ்டபட வைக்கும் முடிவாக உள்ளது.
தற்பொழுது ஆத்துப்பாலம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் கீழ் பகுதியான ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து கரும்பு கடை பேருந்து நிறுத்தம் நோக்கி செல்லும் பகுதியில் அமைந்துள்ளது ஆசாத் நகர் இந்த பகுதியோடு சேர்ந்து உள்பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்
( சுமார் 12000 பேர்)வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றிற்கு செல்வதற்கும் பணி நிமித்தமாக ஆண்கள், பெண்கள் என அனைவரும் வெளியில் செல்வதற்கும் ஆசாத் நகர் பகுதியில் இருந்து வெளியில் வருகின்றனர்
ஆசாத் நகர் பகுதியில் இருந்து பூங்கா நகரில் உள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை விடுவதற்கு செல்வதாக இருந்தாலும் குனியமுத்தர்,போத்தனூர் மற்றும் சுந்தராபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்வதாக இருந்தாலும் எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று தான் செல்ல முடியும் தற்பொழுது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டப்படுவதால் ஆசாத் நகரில் இருந்து வெளியே வந்து இடதுகை பக்கம் திரும்பி கரும்புக்கடை பேருந்து நிறுத்தம் வரை சென்று அதன் பிறகு அங்குள்ள இடைவெளியில் வலது புறம் திரும்பி எதிர்ப்புறம் உள்ள சாலைக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கான வேலையில் மேம்பாலம் கட்டும் கட்டுமான நிறுவனத்தினர் செயல்பட்டு வருகின்றனர் ஆனால் ஆசாத் நகர் பொதுமக்களுக்கு இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்று அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஆசாத் நகர் பகுதியில் ஏதாவது துக்க நிகழ்வுகள் நடந்து விட்டால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு (இட்டேரி, போத்தனூர் ரோடு) எடுத்து செல்லும் போதும் சுற்றிக்கொண்டு செல்லும் நிலைமை ஏற்படும் எனவே ஆசாத் நகர் பகுதிக்கு எதிர்ப்புறம் உள்ள மேம்பாலத்திற்கு கீழே உள்ள பகுதியில் முழுவதுமாக தடுப்புச் சுவர் கட்டாமல் எதிர்புறம் உள்ள சாலைக்கு செல்லும் வகையில் சிறிது இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசாத் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பூங்கா நகர் பகுதி பொதுமக்கள் அனைவரும் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.