கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், 20ம் தேதி முதல் 28ம்தேதி வரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில் என். இ. சி பிரிலிம் மற்றும் ஜூனியர் ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஷிப் எனும் குதிரை பந்தய போட்டிகள் நடைபெற்றது.
இதில் கோவை காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்ற கோவை ஸ்டேபில்ஸ் குதிரை பயிற்சி பள்ளி மாணவர்களான ஆராதனா ஆனந்த், ஹர்ஷித் அருண்குமார், விக்னேஷ் கிருஷ்ணா, பிரித்திவ் கிருஷ்ணா, திவ்யேஷ்ராம், அர்ஷுன் சபரி, ப்ரதிக்ராஜ், ஆதவ்கந்தசாமி, ராம்ரெட்டி, அர்மான், தனிஷ்கா, ராகுல், ஆகிய 12 மாணவர்கள், 13 குதிரைகளுடன் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்களும், 450க்கும் மேற்பட்ட குதிரைகளுடன் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கல பதங்களை கோவை ஸ்டேபில்ஸ் குதிரை பயிற்சி பள்ளி மாணவர்கள் பெற்றனர். அவ்வாறு பெற்ற மாணவர்களுக்கு கோவை காளபட்டி பகுதியில் உள்ள கோவை ஸ்டேபில்ஸ் குதிரை பயிற்சி பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.