கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்க பாறை அருகில் சட்டவிரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. உடனடியாக கோட்டையம் விஜிலென்ஸ் துறை சோதனை நடத்தியது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாறைப்பகுதியில் பாறை உடைப்பதற்கான குறிப்பிட்ட அளவு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவு பாறைகள் உடைத்து கடத்தியது தெரியவந்துள்ளது. புவியியல் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டிருந்தது அப்போது சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட பொழுது இதுவரை அதை கட்டாத நிலையில் மீண்டும் இயந்திரங்களைக் கொண்டு பாறைகளை உடைத்து எடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மீண்டும் வந்த புகாரின் அடிப்படையில் தற்போது நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை மற்றும் விஜிலென்ஸ் கூறியதாவது;
“அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அனைத்து இயந்திரங்களும் கையகப்படுத்தப்பட்டன மற்றும் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்ட விரோதமாக ஈடுபட்ட அனைவருக்கும் தக்க தண்டனை கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.