தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குனியமுத்தூர் கிளை சார்பாக இரத்த தான முகாம்,இலவச மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இந்தியா அஞ்சல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குனியமுத்தூர் கிளை மெகா ஆதார் அடையாள அட்டை முகாம் சாய் நகர் பகுதியில் உள்ள , மஸ்ஜிதுன் நூர் பள்ளி,வளாகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குணியமுத்தூர் கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த முகாம் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர் மாவட்ட தலைவர் T.A.அப்பாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர்.இம்முகாமில் அதார் அடையாள அட்டைதாரரின் பெயர், முகவரி. தொலைபேசி எண், புகைப்படம் மற்றும் விரல் ரேகை திருத்தங்களும், புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்களும் பூர்த்தி செய்யப்பட்டது..மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டு,பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாமிற்கான ஒருங்கிணைப்புகளை குணியமுத்தூர் கிளை நிர்வாகிகள் இஸ்மாயில்,அப்துல் நாசர்,யூசுப்கான்,மன்சூர் அலி ஆகியோர் செய்திருந்தனர்.
-சீனி,போத்தனூர்.