புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட்,திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 38வது தேசியப் புத்தகக் கண்காட்சி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் தொடக்க விழா நடந்தது.
புத்தகக் கண்காட்சி ஜனவரி 5ம்தேதி முதல் 21ம் தேதி முடிய காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.இதில் சிறுகதைகள்,பொது அறிவு கட்டுரைகள்,நாவல்,வாழ்க்கை வரலாறு,போட்டித் தேர்வு நூல்கள்,தமிழ் ஆய்வு நூல்கள்,ஆன்மீகம் உள்ளிட்ட 50 ஆயிரம் தலைப்புகளில் 1லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு.
கோவில்பட்டியில் நடந்த புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
புத்தக கண்காட்சியினை கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் செ.ராஜு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
முதல் விற்பனையை கமலா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சம்பத்குமார் துவக்கி வைக்க ஆசியா பார்ம்ஸ்பாபு பெற்றுக்கொண்டார். இதில் தேசிய நல்லாசிரியை விநாயகசுந்தரி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன், ரவி மாணிக்கம், நடராஜன் மாரியப்பன், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். காந்தி மண்டப பொறுப்பாளர் திருப்பதிராஜா நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ் திருநெல்வேலி கிளை மேலாளர் பூர்ணா ஏசுதாஸ் செய்திருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.