பொள்ளாச்சி : சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மரக்கன்று வழங்கும் விழா அன்னதானம் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மாவீரர் நேதாஜியின் 127 வது பிறந்தநாள் நிகழ்ச்சி விமர்சையாக, நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் ஆர் வெள்ளை நட்ராஜ் தலைமை தாங்கினார்.செயலாளர் எஸ்.மணிகண்டன். நிர்வாகிகள் அமுதன். ஜுபீர். செந்தில்குமார். விக்னேஷ் ஆகிய முன்னிலை வகித்தனர்.
கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் என்.சி.சி மாணவர் படையினர் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி முதல்வர் ஆர் முத்துக்குமரன் மா பலா கொய்யா வேம்பு நெல்லி மகிழம்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான 1000 மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவை குகன் மில் செந்தில் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் வி .கிருஷ்ணகுமார் மதிமுக மாவட்ட செயலாளர் குகன் மில்செந்தில். நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்.
யாவரும் கேளிர் அறக்கட்டளை தலைவர் மணிரத்தினம். அதிரடி அருணாச்சலம்.சுப்பிரமணியம் ஜே .எஸ் .கிட்டன் மன்னுர் ராமர் தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்புராயன் கராத்தே பஞ்சலிங்கம்.தமிழிசைச் சங்க துணை செயலாளர் முரளி கிருஷ்ணன் பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகசுந்தரம். தேமுதிக நகர நிர்வாகிகள் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்.
மக்கள் விடுதலை முன்னணி மாநில தலைவர் ராசைய்யா .
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா.வேட்டைக்காரன் புதூர் சுமன் சரவணன். பொள்ளாச்சி நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ் மாக்கினாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் ஆசிரியர் ஆண்டனி.விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தர்மராஜ் அக்குபாய் தளபதி நவீன் இஜாஸ். நகர மன்ற உறுப்பினர்கள் துரைபாய். எம். கே சாந்தலிங்கம் உமா மகேஸ்வரி.சேக் அப்துல்லா.பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி. வி எஸ் ஆர்.கே.மோகன்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நேதாஜியின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் .கோவை விக்கி. சபரி . உள்ளிட்ட நிர்வாகிகள் பேருந்து ஆட்டோ நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் பேரவை முத்தமிழ் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு
செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.