திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நியூஸ் 7 நிருபர் மீது நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை முக்கோணம் பகுதியில் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட நிருபர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சியின் பல்லடம் நிருபர் நேச பிரபுவை நேற்று முன்தினம் இரவு கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கண்டறிந்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும், இனிவரும் காலங்களில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுக்கு முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரடி ரிப்போர்ட்டர் இதழின் நிருபர் துரைவளவன், சட்ட கவசம் மாத இதழின் தலைமை நிருபர்கள் அப்பாஸ், சின்னமுத்துச்சாமி, பொள்ளாச்சி நிருபர் செந்தில்குமார், தமிழ் டுடே இதழின் கோவை மாவட்ட நிருபர் சாமிநாதன், நாளைய வரலாறு புலனாய்வு இதழின் துணை தலைமை நிருபர் சுரேஷ்குமார் மற்றும் ஆனைமலை நிருபர் அலாவுதீன், கருடன் இதழின் நிருபர் மாணிக்கம், வெற்றிப்பாதை இதழின் பொள்ளாச்சி நிருபர் இர்பான், மாலை நியூஸ் தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனங்களை
பதிவு செய்தனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.