பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி மகன் – வீட்டு வேலைக்குச் சென்ற பெண்ணை….. மகன் மீது வழக்குப்பதிவு..!

பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம் , என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார் அவர்களின் வீட்டில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை எடுக்கும் வீட்டு வேலைக்குச் சென்ற பெண்ணை தனது மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினா கொடுமைப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி விளக்கம்.

வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது சென்னை நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் 12-ம் வகுப்பு வரை படித்த செல்வியின் மகள் ரேகா வயது 18 என்பவர் சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்‌.

மேலும் ரேகா 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா அன் ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக கூறியதாக கூறப்படுகிறது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர்களது வீட்டில் உள்ள எம்எல்ஏவின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை அவரது மகன் மற்றும் மருமகள்கள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் உடலின் பல இடங்களில் அவரது மருமகள் தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனடையே கடந்த 7 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வரவேண்டும் என அவரது தாய் அழைத்ததாலும் சென்னையில் ரேகா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் மீறி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து உடலின் பல இடங்களில் காயம் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், நடந்ததாக கூறப்படும் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசார் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ரேகா தரப்பில் டிஜிபிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் மருமகள் மார்லினா அன் ஆகியோர் மீது சென்னை நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp