கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டி, சோலையார் டேம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் முதல்வர் முகம் நடைபெற்றது இறுதியாக முகம் கருமலை ஸ்டாப் கிளிப்பில் நடைபெற்றது.
இம் முகாமில் C I T U தொழிற்சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சம்பளம் பஞ்சபடியுடன் சுமார் 500 ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளைசரி செய்து தர வேண்டும். சுகாதாரமான முறையில் பாதுகாப்பான கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குழந்தைகள் காப்பகம் படிப்பகம் மேலும் எஸ்டேட் பகுதியில் உள்ள சாலைகளை எஸ்டேட் நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும். தேயிலை தொழிற்சாலை ஆய்வாளர் வால்பாறை பகுதியிலே இருக்க வேண்டும். தொழிற்சாலைகளை நேரடியாக ஆய்வு செய்வது கிடையாது பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகள் பாதுகாப்பில்லாமலும் தொழிலாளர்களுக்கு சரியாக உபகரணங்கள் வழங்காமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரி செய்ய வேண்டும்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொழிலாளர்கள் கேட்டால் அவர்களை பழி வாங்குவதும் வேலைக்கு வராமல் தடுப்பதும் வாடிக்கையாக உள்ளது நீ எங்க வேணாலும் போய் புகார் செய்து கொள் என்று தொழிலாளர்களை மிரட்டுகிறார்கள் இதனால் தொழிலாளர்கள் சிலர் வேலை விட்டு போய்விடுகிறார்கள்.
தொழிலாளர்கள் நல சட்டப்படி ஒவ்வொரு தேயிலை தொழிற்சாலை முன்பு ஆய்வாளரின் பெயர் தொலைபேசி எண் வேலையின் நேரம் பாதுகாப்பு பற்றியும் தெளிவாக குறிப்பிட வேண்டும் ஆனால் பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளில் இதுபோன்ற அறிவிப்பு பலகை இல்லை இதைப் பற்றி நிறுவனங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப் போக்கில் தொழிற்சாலைகளை இயக்க இயக்குகின்றனர்.
தேயிலைத் தொட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் சாமானிய மக்களை பாதுகாக்க வால்பாறை பகுதியிலே நிரந்தரமாக தொழிற்சாலை ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை C I T U சங்கத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
-M.சுரேஷ்குமார்.