கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் அமைந்துள்ள குண்டளை புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் 52-ம் ஆண்டு திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மூணாறு பகுதியிலேயே புனித அன்னை வேளாங்கண்ணி என்ற பெயர் உள்ள ஒரே தேவாலயம் குண்டளை தேவாலயம் ஆகும். கடந்த 23-01-2024 முதல் 26-01-2024 வரை மிகச் சிறப்பாக திருவிழாக்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாவிற்காக கொண்டாடப்பட்டது.
இதன் பாகமாக 23-01-2024 மற்றும் 24-01-2024 இரண்டு தினங்களிலும் மிகச் சிறப்பாக தியானங்களும் நடைபெற்றது. தியானங்களை மிக சிறப்பாக பூப்பாறையைச் சேர்ந்த இமானுவேல் ப்ரேயர் குரூப் தலைமையில் நடைபெற்றது.
25-01-2024 அன்றைய தினம் புனித அன்னையின் கொடி பவனி குண்டலைப் பகுதியில் உள்ள புதுக்கடியில் உள்ள சான்டோஸ் காலனியில் இருந்து கொண்டுவரப்பட்டது.சின்னமனூர் ராமகிருஷ்ணா பேண்ட் செட் மற்றும் செண்டுவாரை பகுதியில் உள்ள ருத்ரா நாசிக் பீட்ஸ் தலைமையில் மேளதாளங்களுடன் அன்றைய தினம் மாலை 6:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அன்னையின் புனித கொடியை பங்குத்தந்தை அலெக்ஸ் பிலிப், எல்லப்பட்டி தேவாலயத்தின் பங்குத்தந்தை அலெக்ஸாண்டர் மற்றும் துணை பங்கு தந்தை டின்டோ இவர்கள் தலைமையில் கொடியேற்றினார்.
கொடியேற்றம் முடிந்ததை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது திருப்பலியில் சிறப்பு விருந்தினராக ஆண்டனிராஜ் கன்னிச்சேரி கல்லார் பங்குத்தந்தை பங்கெடுத்தார்.52 ஆம் ஆண்டு திருவிழாவிற்காக மக்கள் மனதை ஈர்ப்பதற்காகவும் காண்பவர்களுக்கு மனநிறைவாகவும் அமைவதற்காக ஒளி&ஒலி அமைத்து கொடுத்தது ஸ்ரீ முருகன் சவுண்ட் சர்வீஸ் குண்டலை.
26-01-2024 அன்றைய தினம் காலையில் 9:00 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனைகளுடன் 09.30 மணி அளவில் ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலிக்காக சிறப்பு விருந்தினராக குண்டலை மண்ணில் பிறந்து குண்டலையில் வளர்ந்த விக்டர் மேஜர் அவர்கள் இப்பொழுது காந்தளூர் தேவாலயத்தில் பணியாற்றி வருகிறார் இவர் பங்கு பெற்றார். ஆடம்பர திருப்பலி முடிந்தவுடன் மாதாவின் திரு சுரூபங்களும் புனித அந்தோனியாரின் திரு சுருபமும் தீர்த்தமலை சாலை வழியாக குண்டலை லோயர் டிவிஷனில் பவணியாக வரப்பட்டது.
குண்டலை மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த ஆகாஷ் 52 ஆம் வருட மாதாவின் திருவிழாவை ஒட்டி தானாகவே ஒரு பாடல் எழுதி அந்தப் பாடலும் பங்குத்தந்தை அலெக்சாண்டர், துணை பங்குத்தந்தை டிண்டோ தலைமையில் குண்டலை தேவாலயத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கெடுத்தனர் இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் நிறைவாக மாதாவின் புனித கொடி கீழே இறக்கி பாதுகாப்பாக தேவாலயத்தில் வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு 2025 க்கு கொடி எடுப்பதற்காக குலுக்கல் முறையில் பெயர்கள் இட்டு அதற்கான குடும்பத்தை தேர்ந்தெடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.