மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொடுக்கம்பட்டி கிராமம் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கணேசன் மகன் ஆனந்த் ( 22/24) என்பவர் ஆவார், இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த 12.01.2024 அன்று பொங்கலுக்கு துணி வாங்குவதற்காக மேலூர் வந்துவிட்டு கொடுக்கம்பட்டிக்கு தனது நண்பர் கரையிப்பட்டி சிவாவுடன் இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த ஆனந்த்தையும், சிவாவையும் பிற்பகல் சுமார் 3:30 மணி போல் தும்பைப்பட்டி மேம்பாலம் கீழேயுள்ள கக்கன்ஜி ஆர்ச் அருகே கொடுக்கம்பட்டி மற்றும் பேப்பனையம்பட்டியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சாதி குறித்து இழிவாகப் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமோ என கருதி அங்கிருந்து ஆனந்தும், சிவாவும் கொஞ்ச தூரம் நகர்ந்துவிட்டதாகவும், பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் கொடுக்கம்பட்டி நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் கொடுக்கம்பட்டி நோக்கி சென்ற ஆனந்த் மற்றும் சிவாவை மாலை சுமார் 4:15 மணி போல் பேப்பனையம்பட்டி பிரிவு அருகே காத்திருந்து வழிமறித்த அதே கும்பல் சாதிய ரீதியாக பேசி மிரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் ஆனந்துக்கு தலையில் பலத்த இரத்த காயம் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் ஆனந்த் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து படுகாயமடைந்த ஆனந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-தமிழரசன், மேலூர்.