14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விளாத்திகுளத்தில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நாகஸ்வரம் வாத்தியம் தப்பு தாளங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி அன்று தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதையொட்டி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விளாத்திகுளத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் அதிகாரிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தப்பு தாளங்கள் முழங்க மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து துவங்கிய பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் இதில் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பேராசிரியர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஆற்றுப்பாலத்தில் இருந்து தொடங்கி எட்டயபுரம் ரோடு பேருந்து நிலையம் மதுரை ரோடு கீழே ரத வீதி காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது.
மேலும் இது பேரணியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் வாக்குரிமை என வாக்காளர்கள் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசவங்களையும் வழிநெடுகளும் இருந்த வாக்காளர் பொதுமக்களிடம் கொடுத்தும் கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.