கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பேருந்துகள் வசதிகள் நிறைவாக இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இதுகுறித்து C I T U P.பரமசிவம் கோரிக்கை மனு ஒன்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வழங்கியுள்ளார்.
மனுவில் வால்பாறை மலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அடிக்கடி வாகன பழுதால் விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் பழைய பேருந்துகளை மாற்றி விட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் உயிரையும் மற்றும் ஓட்டுனர், நடத்துனரையும் பாதுகாக்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
கடந்த சில வருடங்களுக்கு முன் எங்கள் அமைப்பு வைத்த கோரிக்கையின்படி வால்பாறையில் இருந்து சேலத்திற்கு பேருந்தை இயக்கினீர்கள். இன்று ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். பணிமனையிலும் அதிக வருவாய் வரக்கூடிய பேருந்தாக உள்ளது என்பதை தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதே போல் வால்பாறையிலிருந்து வெளி மாவட்டங்களான திருநெல்வேலி, பெரம்பலூர், ஊட்டி, பொன்னமராவதி மற்று ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்வாதாரத்தை பாதுகாக்க வெளி மாவட்டங்களிலிருந்து வால்பாறையில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள். உடனே பரிந்துரை செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.
தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.