கோவை மாவட்டம் வால்பாறை தமிழக முதல்வரின் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெற இலவச காப்பீடு அட்டை வழங்கும் முகாம் மீண்டும் நடத்த வேண்டும் என்று மக்களின் கோரிக்கையை செய்தியாக நமது நாளைய வரலாறு வெளியிட்டிருந்தது.
மக்களின் கோரிக்கையும் நாளைய வரலாறு செய்தியின் எதிரொலியும் கருத்தில் கொண்டு நேற்று 28.01.2023 ஞாயிற்றுக்கிழமை வால்பாறை நகராட்சி சமுதாயக் கூடத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் உயிர் காக்கும் இலவச மருத்துவ அட்டை பதிவு செய்தல், மகளிர் குழு கடன் உதவி வழங்குதல், சிறு ஒரு தொழில் செய்பவருக்கு கடன் வழங்குதல் நடைபெற்றது. கடந்த முகாம்களில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், வால்பாறை வட்டாட்சியர் அலுவலர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-P.பரமசிவம், வால்பாறை.