கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள நகைக்கடை வீதிக்கு அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. மேலும் குடிநீர் குழாய் உள்ள பகுதியானது குப்பை கழிவுகள் நிறைந்து கழிவு நீர் கால்வாய் அருகே உள்ளதால் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கழிவுநீர் கால்வாய் பகுதிக்குள் பயன்படாமல் போன பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பை கழிவுகள் சேர்ந்து கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது இதனால் இந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவே பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதியை சுத்தம் செய்து குடிநீர் குழாயில் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.