கோவை மாநகர் வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு இயங்கி வருகிறது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் கிடங்கில் தான் குவிக்கப்படுகின்றன. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மற்றும் காசு மாசுபாடு ஏற்பட்டு மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில்
குப்பை சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி குப்பை கிடங்கு அமைக்கின்றபோது கான்கிரீட் பெல்ட் அமைத்து அதன் மீது குப்பைகளை குவிக்க வேண்டும் அப்போதுதான் மழை பெய்கின்றபோது குப்பை மூலம் தண்ணீர் கசிந்து நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கும்.
கோனவாய்க்கால் பாளையம் என்கிற பகுதியில் நிலத்தடி நீர் தற்போதும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஒரு கி.மீ தொலைவில் உள்ள எந்த கிணற்றில் இருந்து நீர் எடுத்தாலும் மஞ்சள் நிறத்தில்தான் உள்ளது. நிலத்தடி நீர் அந்த அளவு பாதித்துள்ளது. வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே பேருந்து நிலையம் வந்தால் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதே நிலை தானே இங்கு வசிக்கும் மக்களுக்கும். தற்போது அருகே உள்ள மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்தின் கீழ் வரும் பகுதிகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அவற்றை முறையாக மூடாமல் வழி நெடுகிலும் சிதறவிட்டு செல்வார்கள். குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் முறையாக வழிகளில் சிந்தாமல் ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
வெள்ளலூர் குப்பை கிடங்கினாள் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படைந்துள்ளது மற்றும் விவசாய நிலங்கள், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கினால் பாதிப்பு அடைந்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் திரு.வசந்நராஜன் அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சர்கள்,பாரத பிரதமர் மோடி ஆகியோரிடம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கோரியதன் விளைவாக பாரத பிரதமர் அவர்களின் அறிவுறுத்தல் படி 19-01-2024 அன்று ( அதாவது இன்று) காலை 9.00 மணி அளவில் உத்தரப்பிரதேச முன்னாள் துணை முதல்வரும் ராஜ்ய சபா உறுப்பினருமான M.P திரு. தினேஷ் ஷர்மா அவர்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது . எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி இன்று வெள்ளலூர் குப்பை கிடங்கை ஆய்வு செய்ய உத்தரப்பிரதேச முன்னாள் துணை முதல்வரும் ராஜ்ய சபா M.P யுமான திரு. தினேஷ் ஷர்மா அவர்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்துக் கொண்டு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
நான் இரண்டு முறை லக்னோ மேயராக பதவி வகித்துள்ளேன். அச்சமயத்தில் இது போன்ற பிரச்சினைகளுக்கு தான் தீர்வு கண்டதாகவும் தெரிவித்தார் அதாவது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது மற்றும் உரம் தயாரிப்பது போன்ற போன்ற செயல்களை செய்யும் பொழுது நிறைய பிரச்சனைகள் குறைந்ததாகவும் அதுபோன்று இங்கு செயல்படவில்லை என்றும் வருத்தத்தை தெரிவித்தார் தான் தூய்மை இந்தியா திட்டத்தின் படி ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்குள்ள குறை நிறைகளை சரி செய்து வருவதாகவும் தெரிவித்தார் தூய்மை நகரமாக இருந்த கோயம்புத்தூர்,
42வது இடத்தில் இருந்து 180 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது என்றும் தன் வருத்தத்தை தெரிவித்தார் இந்த குப்பை கடங்கிக்காக 2018ல் மத்திய அரசு இதை சரி செய்யும் படி உத்தரவு போடப்பட்டதாகவும் அதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி தந்ததாகவும் அந்த நிதியை தமிழக அரசு வேறு திட்டங்களுக்கு உபயோகப்படுத்தி விட்டதால் இந்த குப்பை கிடங்கு பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்றும் தன் வருத்தத்தை தெரிவித்தார் மேலும் பொதுமக்களிடமும் குப்பை கிடங்கை சுற்றியுள்ள பொதுமக்கள் நல சங்கங்கள் இடமிருந்தும் மனுக்களை பெற்றுக் கொண்டார் இது சம்பந்தமாக மத்திய அரசிடம் தான் ஒரு அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.