கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக வால்பாறை சோலையார் டேம் உள்ளிட்ட பகுதிகளில் உயிர்காக்கும் முதலமைச்சர் இலவச காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் முகாம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், மலைவாழ் மக்கள் ஆகியோர் காப்பீட்டு அட்டை பெறாமல் மருத்துவ சிகிச்சைக்கு பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த அட்டை பெறுவதற்கு 100 கிலோமீட்டர் கடந்து கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று பெற வேண்டி சூழ்நிலை இதனால் வேலை இழப்பும் பண இழப்பும் நேரம் இழப்பும் ஏற்படுவதால் மருத்துவ காப்பீடு அட்டை வாங்காமல் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் மருத்துவ அட்டை பெறுவதற்கு வால்பாறையில் முகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முகாமில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரும்பாலானோர் மருத்துவ காப்பீடு அட்டை வாங்குவதற்கு பதிவு செய்யாமல் போனது அதனால் மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை எஸ்டேட் வாரியாக மருத்துவ காப்பீட்டு
வழங்கும் முகாம் ஏற்பாடு செய்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
முகாமில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பெரும்பாலானோர் உரிய ஆவணங்கள் கொண்டு வராததாலும் ஒரு சிலர் முகாமுக்கு வர முடியாமல் போனதாலும் இவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஒரு முறை மருத்துவ காப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.