சமூக சேவையில் சிறந்து விளங்கும் நல் உள்ளங்களை தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி விருதுகள் வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு தொடங்கப்பட்ட அமைப்புதான்
நேஷனல் டிரேடர்ஸ் இண்டர்நேஷனல்.
இந்த அமைப்பானது சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க வழிமுறைகள் தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அவர்களது கஷ்டமான சூழ்நிலையில் இருந்து அவர்களை வெளிக்கொண்டுவரும் சேவையை செய்து வருபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தொடங்கப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான விருதினை நேஷனல் டிரேடர்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் ஜனவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மக்கள் சமூக சேவைக்கான விருதினை நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழின் வெளியீட்டாளர் திரு. முகமது இஸ்மாயில், ஆசிரியர் திரு. முகமது ஹாரூன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் திரு. திருமால் அவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சமூக சேவையில் இவர்களின் பங்கு மகத்தானது. உதவி என்று வருபவர்களுக்கு இன்முகத்துடன் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. சிறந்த மக்கள் சமூக சேவைக்கான விருதினை பெற்றிருக்கும் இவர்களை நாளைய வரலாறு குடும்பம் மற்றும் சமூக சேவையில் நாட்டம் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்களுடைய மக்களின் சமூக சேவை தொடர என்றைக்கும் இறைவன் துணை நிற்பானாக
இவர்களின் செயல்பாடுகளை பார்த்து யாரேனும் சிலரின் மனதில் நாமும் சமூக சேவையை ஆற்றுவோம் என மனமாற்றம் ஏற்பட்டாலே கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.