கோயம்புத்தூர் விழாவையொட்டி மாபெரும் உணவுத் திருவிழா- துவக்கி வைத்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்.
உணவுத் திருவிழா துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது.
கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில் மாபெரும் உணவு திருவிழா துவங்கியது.
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் என்கிற உணவு திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் சைவம், அசைவம் என கோவையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட உணவககங்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பொதுமக்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரம்பரிய தமிழ் கலைகளான ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. முன்னதாக உணவுத் திருவிழா துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது.
மேலும் உங்கள் பகுதியில் உடனுக்குடன் முக்கிய செய்திகளை காண எங்கள் நாளைய வரலாறு புலன தளத்தில் பதிவிடும் செய்திகளை படியுங்கள்.
-சீனி, போத்தனூர்.