கோவை மாவட்டம் போத்தனூர் 99 வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. வருகின்ற பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு, மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1000 ரூபாய் பணமும் அத்துடன் பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் இன்று 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் அந்த வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா முன்னிலையில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 99வது வட்ட கழக செயலாளர் முரளி முகமது ஜின்னா, வட்டக் கழக அவை தலைவர், சம்சுதீன், நட்ராஜ், சீரின், சாதிக் மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் பரிசினை பெற்று சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.