கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரத்தில் முதல் முறையாக புத்தாண்டுக்கான புதிய அறிமுகம் என கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸில் சலோ ஆப் என்ற பெயரில் டிஜிட்டல் பெய்மெண்ட் போன்ற பணப்பரிவர்த்தனைகளை டிக்கட்டிற்காக உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமையும் என்பதற்காக 70 சிட்டி பஸ்களை பரிசோதனைக்காக கே.எஸ்.ஆர்.டி.சி அனுமதித்துள்ளது. இதன்மூலம் சில்லறை கொடுக்கவில்லை எனவும் பயணிகளும் கூற முடியாது, நடத்துணரும் கூற முடியாது, இதுபோன்ற ஆன்லைன் சர்வீஸ் நடை பெறுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்களின் கருத்துப்படி பணங்களை கையில் பிடிப்பது சில நேரங்களில் திருடர்கள் பறித்து செல்கிறார்கள் என்ற பயம் வேண்டாம் என கே.எஸ்.ஆர்.டி.சி இல் பயணம் செய்யும் பயணிகள் கூறியுள்ளனர். இந்த 70 பஸ்கள் மூலம் பரிசோதனை நடந்து வருகிறது இது வெற்றிகரமாக அமைந்தால் கேரளத்தில் உள்ள அனைத்து கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களிலும் சலோ ஆப் என்ற ஆன்லைன் டிஜிட்டல் பேமென்ட் நடைமுறைக்கு வரும் எனவும் கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அஜித்,மூணாறு.