கோவை மாவட்டம் வால்பாறை சிறுவர் பூங்கா அருகே அமைந்துள்ள வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானம் குண்டும் குழியுமாக இருக்கிறது.
இந்நிலையில் விளையாட்டு மைதானத்திற்குள் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்வதால் மைதானம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள மாணவர்கள் விடுமுறை நாட்களில் காலை மாலை இரு வேலைகளிலும் வந்து விளையாடி பயிற்சி பெறுவது வாடிக்கையாக இருந்து வந்தது இந்நிலையில் மைதானம் மிகவும் மோசமாக இருப்பதால் விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் பயிற்சி பெற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக முழுவதும் விளையாட்டு வீரர்களை உருவாக்க அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து பயிற்சி அளித்து பயின்றவர்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் பெருமையைத் தந்துள்ளனர்.
அந்த வகையில் வால்பாறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமையை தந்துள்ளனர் மேலும் வரும் காலங்களிலும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமையை தேடித் தர ஆரம்பக் களமாக இருக்கும் வால்பாறை விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தர நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைதானத்தை பயன்படுத்தும் மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்செய்தி அறிந்து மைதானத்திற்கு நாளைய வரலாறு புலனாய்வு இதழின் வால்பாறை நிருபர் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததில் உண்மை தன்மையை தெரிந்து கொண்டார் குண்டும் குழியுமான மைதானத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியை தடுக்காமல் வால்பாறை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் வீரர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
செய்தியாளர்,
வால்பாறை
-P.பரமசிவம்.
One Response
வால்பாறை கால்பந்து மைதானம் பல ஆண்டுகளாக சிகரம் வைக்காமல் உள்ளது பலமுறை வால்பாறை கால்பந்து சங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து மைதானத்தை சீரமைக்க எவ்வளவோ பாடுபட்டு வருகின்றது நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளவில்லை