தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் குறுக்குச்சாலை ஊராட்சி தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.13 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கட்டிடம் கட்டும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ரமேஷ் துணை சேர்மன் காசி விஸ்வநாதன் சமூக பாதுகாப்பு வட்டாச்சியர் செல்வக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி கிராம நிர்வாக அலுவலர் வசந்தா
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் முனியம்மாள், அருண்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.